Skip to main content

புதுவையில் கரோனாவால் உயிரிழந்தவரை வீசி சென்ற விவகாரம்!! மூவர் பணியிடை நீக்கம்... - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

Published on 08/06/2020 | Edited on 08/06/2020
Narayanasamy announces

 

சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 40 வயது நபர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது அங்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோபாலன்கடை மயானத்திற்கு அவரது உடலை கொண்டு சென்ற வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் அவரது உடலை சவக்குழியில் வீசி, அதன்பிறகு உள்ளே தள்ளும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் குறித்து புதுச்சேரி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், வில்லியனூர் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் சடலத்தை புதைகுழியில் வீசிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்வதாகவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளவும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்