நிலவுக்கு அருகே தகவல் தொடர்பை இழந்த 'விக்ரம் லேண்டரின்' இருப்பிடம் குறித்து கண்டறியப்பட்டது. இருந்த போதிலும் லேண்டரின் தகவல் தொடர்பு, இன்னும் கிடைக்கவில்லை என இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் நேற்று அறிவித்தார்.
நிலவின் மேற்பரப்பில் லேண்டர் உள்ளதற்கான புகைப்படத்தை ஆர்பிட்டர் கருவி புகைப்படம் எடுத்த நிலையில், தொடர்ந்து அதனையுடன் தொடர்புகொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாக்பூர் காவல்துறையினர் விக்ரம் லேண்டர் குறித்து வேடிக்கையாக பதிவிட்ட ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாக்பூர் காவல்துறை, "டியர் விக்ரம், தயவு செய்து தொடர்புக்கு வாருங்கள். நீங்கள் சிக்னலை மீறியதற்காக நாங்கள் அபராதம் எதுவும் விதிக்க மாட்டோம்” என வேடிக்கையாக பதிவிடப்பட்டுள்ளது. இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் நாங்களும் விக்ரம் லேண்டரின் சிக்னலுக்காக காத்திருக்கிறோம் என பதிலளித்து வருகின்றனர்.