ஆந்திர மாநிலம், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான ரோஜா தனக்கு அளிக்கப்பட்ட புதிய பதவி நேற்று ஏற்றுக்கொண்டார்.

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து ஜெகன்மோகன் முதல்வரானார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றிபெற்றதற்கு ரோஜாவின் பிரச்சாரமும் முக்கிய காரணம். இதனைத்தொடர்ந்து அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு எந்தவிதமான அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை.
இதனால் ரோஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் ரோஜா அதை வெளிப்படையாக காட்டவில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு ஆந்திர மாநில தொழில்துறை கட்டமைப்பு நிறுவன தலைவராக அவரை ஜெகன்மோகன் அறிவித்தார். இந்த அறிவிப்புகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதைத்தொடர்ந்து ரோஜா தற்போது அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.