Published on 21/09/2022 | Edited on 21/09/2022

சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.
சுபீனா பானு- அப்துல் கானி தம்பதியர் திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதான திட்டத்திற்கு 15 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். மேலும், அண்மையில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீ பத்மாவதி தாயார் தங்கும் விடுதிக்கு 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களையும், அவர்கள் வழங்கியுள்ளனர்.
நன்கொடைக்கான வரைவோலையை சுபீனா பானு- அப்துல் கானி தம்பதியர் ரங்கநாயக மண்டபத்தில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரியிடம் வழங்கினர். இந்த இஸ்லாமிய தம்பதி திருமலை திருப்பதி அன்னதானத் திட்டத்திற்கு ஏற்கனவே, பலமுறை நன்கொடை வழங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.