Skip to main content

பங்குச்சந்தையிலும் எதிரொலித்த கருத்துக்கணிப்பு முடிவுகள்!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

இந்தியாவில் 17-வது மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே நேற்று நாடு முழுவதும் 59 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை இந்தியாவில் உள்ள முன்னணி ஆங்கில செய்தி நிறுவனங்கள் இந்தியா டுடே, டைம்ஸ் நவ், நியூஸ் 18 தொலைக்காட்சி, சி வோட்டர்ஸ்  வெளியீட்டுள்ளனர். அதில் பாஜக தலைமையிலான கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் எனவும், பாஜக தனி பெரும்பானமையும் ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.

 

PM

 

மேலும் பதிவான வாக்குகள் மே - 23 ஆம் தேதி எண்ணப்படுகிறது.அதனைத் தொடர்ந்து மும்பை பங்கு சந்தையில் இன்று காலை தொடக்க முதலே ஏற்ற நிலை காணப்படுகிறது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணாண சென்செக்ஸ் 962 புள்ளிகள் உயர்ந்து 38,892 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 286 புள்ளிகள் உயர்ந்து, 11694 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் உள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்