/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsv_0.jpg)
2021 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்தது. இதன் காரணமாக அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்து உலகக்கோப்பைதொடரில் இருந்து வெளியேறியது.
இந்தச்சூழலில்பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்றத்தால், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் சிலர் சமூகவலைதளங்களில் வசைபாடினர். மேலும்விராட் கோலியின் குழந்தைக்குப் பாலியல் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவர்களின் இந்தசெயலுக்குக் கடும் கண்டனங்களும் குவிந்தன. இந்தநிலையில்மும்பை போலீசின் சைபர் செல், விராட் மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுத்த23 வயதான ராம்நாகேஷ் அலிபத்தினிஎன்ற இளைஞரை ஹைதராபாத்தில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரைமும்பைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார்திட்டமிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)