Published on 12/05/2020 | Edited on 12/05/2020

உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் இந்த வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ள நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியுமான தாராவியில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மேலும் 46 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதன் மூலம் தாராவியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 962 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் இன்று இருவர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவில் இருந்து இதுவரை 222 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.