Skip to main content

பதவி விலகிய முகேஷ் அம்பானி... 'ரிலையன்ஸ் ஜியோ'வில் அதிரடி மாற்றம்

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

Mukesh Ambani resigns

 

இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரும், முக்கிய பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

முகேஷ் அம்பானி 'ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம்' நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்த பொறுப்பை அவரது மகனான ஆகாஷ் அம்பானி ஏற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஆகாஷ் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் மகள் ஆகிய இருவரும் 'ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம்' நிறுவனத்தின் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களைக் கவனித்து வந்தார்கள். மேலும் பங்கஜ் மோகன் பவார்  'ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம்' நிறுவனத்தின் புதிய மேனேஜிங் டைரக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். ரவீந்திரசிங் குஜ்ரால், கே.வி.சௌத்ரி ஆகியோர் கூடுதல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நியமனங்கள் ஐந்து வருடங்களுக்கானவை என  'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விண்டோஸ் மென்பொருள் முடங்கியது!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Windows software error

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் விண்டோஸ் (Windows) மென்பொருள் முடங்கியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பத்துறை, வங்கி, விமானம், ரயில், மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) என்ற அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் விண்டோஸை புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ப்ளு ஸ்கிரின் எரர் ( Blue Screen Error) ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட உலகம் முழுவதும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடட் உள்ளிட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு விமான சேவைகள் தாமதமாகும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உலகளாவிய விண்டோஸ்  செயலிழப்பு தொடர்பாக மைக்ரோசாப்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன்  தொடர்பில் உள்ளது. இந்த செயலிழப்புக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘முகேஷ் அம்பானி வீட்டுத் திருமணத்திற்கு ஏன் செல்லவில்லை?’ - டாப்ஸி பதில்

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Taapsee answers Why didn't Mukesh Ambani go to a house wedding?

உலகில் பிரபல பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, இந்தியாவில் முக்கியமான தொழிலதிபராகவும் இருக்கிறார். இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு கடந்த 13ஆம் தேதி வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள முக்கிய பிரபலங்கள், தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தம்பதியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

இந்தியாவை பொறுத்தவரை, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக் கான், பூஜா ஹெக்டே, அட்லீ உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், பிரபல மல்யுத்த குத்து சண்டை வீரர் ஜான் சீனா,  ஹாலிவுட் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டனர். பல பிரபலங்கள் கலந்துகொண்டாலும், சிலர் இதில் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டனர். அதில், முக்கியமானவர் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நாயகி டாப்ஸி. 

பிரபல நடிகை டாப்ஸி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்திற்கு செல்லாதது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியாது. திருமணங்கள் என்பது விருந்தளிக்க குடும்பத்திற்கும், விருந்தினருக்கும் இடையே தனிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அதனால், விருந்தளிக்கும் குடும்பத்திற்கும், விருந்தினருக்கும் இடையே ஒருவிதமான தொடர்பு இருக்கும் திருமணத்திற்கு செல்லவே விரும்புகிறேன்” என்று கூறினார்.