
ஆத்திரத்தில் நடந்த சண்டையில் மருமகளின் தலையை மாமியாரே வெட்டி காவல் நிலையத்திற்கு தலையுடன் வந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தபேட்டை ராமாபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருடைய மருமகள் வசுந்தரா. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வரும் நிலையில், அண்மையில் வீட்டில் மாமியார் சுப்பம்மாவிற்கும், மருமகள் வசுந்தராவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது மருமகள் வசுந்தராவின் உறவினர்கள் அவருக்கு ஆதரவாக வீட்டிற்கு வந்து மாமியார் சுப்பம்மா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பம்மா 'ஆளை கூட்டிவந்தா அடிக்க வைக்கிறாய்' என ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மருமகள் வசுந்தராவை வெட்டி தலையை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார்.

பெண் ஒருவர் மனித தலையுடன் வந்ததை கண்டு அதிர்ந்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், மாமியரே மருமகளை அரிவாளால் வெட்டியதிடுக் தகவல்வெளிச்சத்திற்கு வர, சுப்பம்மாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)