Published on 05/07/2021 | Edited on 05/07/2021
இந்தியாவைப் பொறுத்தமட்டில் கரோனா இரண்டாம் அலையானது மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வேகமாகப் பரவி வந்த நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதுவும் கடந்த சில நாட்களாக தினமும் 30 லட்சத்துக்கும் அதிகமான பேருக்கு இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஒரே நாளில் 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்றும் மட்டும் 41.34 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.71 கோடியாக உயர்ந்துள்ளது.