கேரளாவைச் சேர்ந்த மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று துபாயில் இருந்து கண்ணூருக்கு வந்த 31 வயது இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த இளைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு உறுதிச் செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.