Skip to main content

குரங்குகளின் சேட்டையை அடக்க கரடி வேஷம் போட்ட இளைஞர்கள்... அடங்கிய குரங்குகள்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

சேட்டை செய்யும் குரங்குகளை அடக்க கிராம மக்கள் கரடி வேஷம் போட்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் சிக்கந்தப்பூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்கள் சுற்றித்திரிவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்களை குரங்குகள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கடித்துள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.



புகார் அளித்த சில நாட்கள் ஆன நிலையிலும் அதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கிராம மக்கள் தற்போது நூதனமான முறையில் குரங்குகளை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அதன்படி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கு கரடி வேஷம் போட்டு பகல் நேரங்களில் கிராமத்தை சுற்றி வர சொல்கிறார்கள். குரங்குகளும் கரடி வருவதாக நினைத்து  கொண்டு மரங்களில் பதுங்கிக் கொள்கின்றன. குரங்குகளின் சேட்டையை குறைந்த மகிழ்ச்சியில் கிராம மக்கள் தங்களின் அன்றாட பணியினை தற்போது செய்து வருகிறார்கள். 
 

 

சார்ந்த செய்திகள்