Skip to main content

ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி...

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

modi speaks with biden about shared priorities and concerns

 

 

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஜோ பைடனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளார் பிரதமர் மோடி. 

 

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் முறையாக அதிபர் மற்றும் துணை அதிபராக வரும் ஜனவரி மாதம் பொறுப்பேற்க உள்ளனர். இந்நிலையில், சர்வதேச நாடுகள் பலவும் பைடனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், ஜோ பைடனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு தொலைபேசியின் வழியாக வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்திய-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்கான நமது உறுதியான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். மேலும், திருநாட்டின் பொதுவான சிக்கல்களான கரோனா தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு பற்றி விவாதித்தோம். துணை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிசுக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவரது வெற்றி இந்திய-அமெரிக்க உறவுகளுக்கு மிகப்பெரிய பலமாக விளங்கும். இது துடிப்பான இந்திய-அமெரிக்க சமூகத்தின் உறுப்பினர்களுக்கு மிகுந்த பெருமை மற்றும் உத்வேகம் அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இதுவே கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது'-அதிர்ச்சி கொடுத்த ஜோ பைடன்

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 'I hope this is good for the party and the country' - shocked Joe Biden

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது. இந்நிலையில் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 'மிஞ்சியிருக்கும் தனது பதவி காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளை நிறைவேற்றுவேன்; இதுவே எனது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன்' என அறிக்கை வாயிலாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Next Story

பிரதமர் மோடியை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
RSS leader who indirectly attacked PM Modi!

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். அவரது பேச்சு, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து பிரதமர் மோடியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். 

இந்த நிலையில், பிரதமர் மோடியின் அந்த கருத்தை, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா பகுதியில் கிராம அளவிலான தன்னார்வலர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “முன்னேற்றத்திற்கு எப்போதாவது ஒரு முடிவு உண்டா? நாம் நமது இலக்கை அடையும்போது, ​​இன்னும் செல்ல வேண்டியவை அதிகம் இருப்பதைக் காண்கிறோம். ஒரு மனிதன் சூப்பர்மேன் ஆக விரும்புகிறார். திரைப்படங்களில் அவர்கள் அசாதாரண சக்திகளைக் கொண்ட சூப்பர்மேனைக் காட்டுகிறார்கள். எனவே ஒரு மனிதன் அத்தகைய சக்தியைப் பெற விரும்புகிறான். 

ஆனால், அவன் அதோடு மட்டும் நிற்கவில்லை. அதன்பிறகு தேவனாக விரும்புகிறான். ஆனால் தேவதாஸ்  நம்மை விட கடவுள் பெரியவர் என்று கூறுகிறார்கள். எனவே மனிதர்கள் கடவுளாக மாற விரும்புவதாக கூறுகிறார்கள். ஆனால், பகவான் தன்னை ஒரு விஸ்வரூபம் என்கிறார். அதைவிடப் பெரியது எதுவும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. 

வளர்ச்சிக்கு முடிவே இல்லை. எப்பொழுதும் அதிகமானவற்றிற்கு வாய்ப்பு இருப்பதாக ஒருவர் நினைக்க வேண்டும். தொழிலாளர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் அதிகமாக பாடுபட வேண்டும். நிறைய வேலைகள் செய்ய வேண்டும். பல குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுத்தாலும், கல்வி தேவைப்படும் என்ற புதிய தலைமுறை உருவாகி வருகிறது. வளர்ச்சி என்பது ஒரு தொடர் பணி. ஒரு தொழிலாளிக்கு நாம் இவ்வளவு செய்தோம், ஆனால் இன்னும் நிறைய இருக்கிறது என்ற உணர்வு இருக்க வேண்டும்.