மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Advertisment

modi going to file nomination in varanasi on april 26

இந்நிலையில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் வரும் 26 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 19 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ள வாரணாசியில், 26 ஆம் தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு அதன் பிறகு வேட்பு மனுவை தாக்கல் செய்ய செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி வேட்பு மனு தாக்கலின் போது அமித்ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.