modi

டெல்லியில் தற்போது ஐநாவின் உயரிய விருதான சுற்றுழல் விருதினை( சேம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்) பிரதமர் மோடி ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் கையால் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, 2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நெகிழி பொருட்களை அறவே ஒழிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டதற்காகவும், சர்வதேச அளவில் சூரிய எரிசக்தி கூட்டமைப்பை தலைமை ஏற்று வழிநடத்துவதற்காகவும், ஐநா சபையின் உயரிய விருதான சுற்றுசூழல் விருதை இந்திய பிரதமர் மோடிக்கு வழங்க தேர்வு செய்திருந்தது ஐநா குறிப்பிடத்தக்கது.

Advertisment

சுற்றுசூழல் பிரச்சனைகளில் பங்காற்றியவர்கள் மற்றும் அதனை தீர்க்க புதுமையான விஷயங்களை கையாண்டவர்களை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.