modi about jandhan account scheme

ஜன் தன் திட்டம், பொருளாதாரத்தின் போக்கை மாற்றக்கூடிய முயற்சி எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஏழை மக்களுக்கான வங்கிக்கணக்கு தொடங்கும் திட்டமான ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து, இத்திட்டம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், "இன்றைய தினம், 6 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் மூலம் வங்கிக் கணக்கு இல்லாதோருக்கு வங்கிக் கணக்குதொடங்கும் முயற்சி அறிமுகம் செய்யப்பட்டது. இது பொருளாதாரத்தின் போக்கை மாற்றக்கூடிய முயற்சியாகியுள்ளது. இது, பல வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு அடித்தளமான திட்டமானது. கோடிக்கணக்கான மக்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.

Advertisment

பல குடும்பங்களின் எதிர்காலம் பாதுகாப்பாகியுள்ளது, பிரதமர் ஜன் தன் யோஜனாவுக்கு நன்றி. இதில் கிராமப்புறம் மற்றும் குறிப்பாகப் பெண்கள் அதிக விகிதத்தில் பயனடைந்துள்ளனர். பிரதமர் ஜன் தன் யோஜனாவுகாக ஓய்வின்றி உழைத்த அனைவருக்காகவும் நான் நன்றி கூறுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.