Skip to main content

’மோடியை எதிர்ப்பவர்களை உயிரோடு புதைத்து விடுவேன்’-அமைச்சர் மிரட்டல்

Published on 14/01/2020 | Edited on 14/01/2020
r

 

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சியினர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் நடத்தினர். துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச அமைச்சர் ரகுராஜ்சிங் கலந்து கொண்டு பேசினார்.

 

அப்போது அவர் பேசியபோது, நாடு முழுவதும் ஒரு சதவீதம் மக்களே குடியுரிமையை எதிர்க்கிறார்கள்.  பிரதமர் நரேந்திர மோடியையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் எதிர்ப்பவர்களை உயிரோடு புதைத்து விடுவேன்’’என்று கூறியுள்ளார். 

 

பொது வெளியில் வெளிப்படையாக கொன்றுவிடுவேன் என அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்