உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாஃபர் நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியை ஒருவர், தனது வகுப்பில் பயிலும் குழந்தைகளில் ஒரு இஸ்லாமிய மாணவரை அடிக்கும்படி, சக மாணவர்களுக்குச் சொல்லும்படியான வீடியோ அண்மையில் வெளியாகி இருந்தது. அதுமட்டுமின்றி அந்த ஆசிரியர், சிறுவனுடைய இஸ்லாமிய மதத்தைக் குறிப்பிட்டு, “முகமதிய குழந்தைகள்” எனவும் “இந்த இஸ்லாம் குழந்தைகள் அனைவரும் எந்தப் பகுதிக்காவது செல்லுங்கள்” என்று இழிவாகப் பேசியிருந்தார்.
மேலும் அந்த வீடியோவில், அந்த இஸ்லாமிய மாணவனை அறைந்துவிட்டு உட்கார்ந்த இன்னொரு மாணவனை பார்த்து ஆசிரியை திரிப்தா தியாகி, “ஏன் இவ்வளவு லேசாக அடிக்கிற? அவனை கடுமையாக அடி” என்று கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அதே சமயம் அந்த பள்ளி ஆசிரியை திரிப்தா தியாகி ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டு இருந்தார். அதில் மாணவர்கள் தங்கள் வகுப்பு இஸ்லாம் மாணவனை அறையச் சொன்னதன் பின்னணியில் தனக்கு எந்தவித வகுப்புவாத நோக்கமும் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்க 25 ஆம் தேதிக்குள் உத்திர பிரதேச அரசு விளக்கமளிக்க ஆனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய முசாஃபர் நகர் போலீஸ் எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.