Skip to main content

ஆம்புலன்ஸ் மீது மோதிய அமைச்சரின் வாகனம்; இணையவாசிகள் விமர்சனம்

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

Minister's vehicle collides with ambulance

 

கேரளா மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சிவன்குட்டி. இவர், நேற்று திருவனந்தபுரம் நோக்கி தனது அரசு வாகனத்தில் பயணித்தார். திருவனந்தபுரத்திற்குச் செல்லும் வழியில் முக்கிய சந்திப்பாக புலம் சந்திப்பு இருக்கிறது. அங்கு போக்குவரத்து சிக்னல் வேலை செய்யாததால், காவல்துறையினர் போக்குவரத்தை முறைப்படுத்திக் கொண்டிருந்தனர். 

 

இந்தச் சமயத்தில், கொட்டக்கரா எனும் மருத்துவமனையில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்ஸ் நோயாளியுடன் அதே புலம் சந்திப்பைக் கடக்க முயன்றது. அப்போது அமைச்சரின் பாதுகாப்பு வாகனமான கான்வாய் அந்தச் சந்திப்பில் வேகமாகத் திரும்புவதற்கு வந்தபோது, ஆம்புலன்ஸ் மீது அமைச்சரின் கான்வாய் வாகனம் மோதி, ஆம்புலன்ஸ் நடு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும், அமைச்சரின் கான்வாய் அங்கு நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்திலும் மோதியது. 

 

Minister's vehicle collides with ambulance

 

உடனடியாக அந்தப் பகுதியில் இருந்த மக்களும், காவல்துறையினரும் இணைந்து கவிழ்ந்த ஆம்புலன்ஸை மீட்டனர். அந்த ஆம்புலன்ஸில் நோயாளி உட்பட மூவர் இருந்தனர். அவர்கள் மூவருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 

 

இந்நிலையில், அமைச்சரின் கான்வாய் வாகனம் ஆம்புலன்ஸ் மீது மோதிய சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் இணையவாசிகள், அமைச்சரின் வாகனம் தவறான பாதை அதாவது எதிர்த்திசை பாதையில் வேகமாக வந்திருக்கிறது என விமர்சனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வனவிலங்குகள் தாக்கி 3 பேர் உயிரிழப்பு; ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
3 people incident wild animal issue Rahul Gandhi consoled in person

வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.  இந்த வன விலங்குகள் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை வயநாட்டில் வன விலங்குகள் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து வயநாடு பகுதியில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையை இன்று ஒருநாள் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு வயநாடு தொகுதிக்கு திரும்பினார். இதனையடுத்து வயநாட்டில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அதன்படி யானை தாக்கி உயிரிழந்த வனக்காவலர் அஜீஷின் என்பவர் வீட்டிற்கும், புலி தாக்கியதில் உயிரிழந்த பிரஜீஷின் வீட்டிற்கும், சுற்றுலா வழிகாட்டி பாலின் வீட்டிற்கும் இன்று காலை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களையும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

Next Story

“மோடியின் புகைப்படத்தை வைக்க முடியாது” - கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடி

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Kerala Chief Minister Pinarayi Vijayan says Modi's photo cannot be placed

கேரளா மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 550 ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் கொண்ட அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என்றும், உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு மத்திய அரசின் இலச்சினை கொண்ட பைகள் பயன்படுத்த வேண்டும் என்று கேரள மாநில உணவுத்துறைக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று (12-02-24) விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளாவில் நீண்ட காலமாக பொது விநியோக திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கி வருகிறது. எனினும், இதில் இதுவரை இல்லாத வகையில் புதிய விளம்பர முறையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், இது போன்ற உத்தரவு தேர்தல் பிரச்சார உக்தியாகத்தான் பார்க்க வேண்டியதாக உள்ளது. 

அதனால், பிரதமர் மோடியின் புகைப்படம் கொண்ட விளம்பர பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசிடம் தெரிவிப்போம். மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரமாக மத்திய அரசு இதனை பயன்படுத்தும் என்பதால், இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவும் கேரள அரசு முயற்சி எடுக்கும்” என்று கூறினார்.