உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 75,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
बालाघाट का एक #मजदूर जो कि हैदराबाद में नौकरी करता था 800 किलोमीटर दूर से एक हाथ से बनी लकड़ी की गाड़ी में बैठा कर अपनी 8 माह की गर्भवती पत्नी के साथ अपनी 2 साल की बेटी को लेकर गाड़ी खींचता हुआ बालाघाट पहुंच गया @ndtvindia @ndtv #modispeech #selfreliant #Covid_19 pic.twitter.com/0mGvMmsWul
— Anurag Dwary (@Anurag_Dwary) May 13, 2020
மூன்றாம் கட்ட ஊரடங்கு இந்தியாவில் நடைமுறையில் உள்ள நிலையில் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான். அந்த வகையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராமு என்பவர் தெலுங்கானா மாநிலத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு மனைவியும், அனுராகினி என்ற கைக்குழந்தையும் உள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த சில வாரங்களாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால் தெலுங்கானாவில் இருந்து தன் சொந்த ஊரான மத்திய பிரதேசத்துக்கு செல்ல முடிவெடுத்த அவர் தனது கர்ப்பிணி மனைவி, குழந்தையுடன் நடைபயணமாக நடக்க ஆரம்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வந்த அவர் நேற்று மத்திய பிரதேச மாநில எல்லையை அடைந்துள்ளார். அங்கிருந்த காவல்துறையினரிடம் தன் நிலையை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவர்கள் மூவரும் வீட்டிற்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் சாலையில் நடந்து செல்லும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.