Skip to main content

பிணவறையில் இருந்த சடலத்தின் கண்களை தின்ற எலிகள்!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

பிணவறையில் இருந்த மனித உடலின் கண்களை எலிகள் தின்ற சம்பவம் ஆந்திராவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் எலுரு மாவட்டத்தில் உள்ள வாசியா கிராமத்தில் வசித்து வருபவர் வைகுண்ட வாசு. இவர் கடந்த புதன்கிழமை வாகன விபத்தில் உயிரிழந்தார். பிரதே பரிசோதனை செய்யப்பட்ட அவரின் உடல் அரசு பொதுமருத்துவமனையில் உள்ள பிணவறையில் கடந்த சில நாட்களாக வைக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில் இன்று காலை அவரின் உடலை வாங்க அவர்களுடைய உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவ நடைமுறைகள் முடிந்த பிறகு, அவரின் உடலை மருத்துமனை ஊழியர்கள் வாசுவின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். வாசுவின்  உடலை பார்த்த அவருடைய உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வாசுவின் இரண்டு கண்களையும் எலிகள் கடித்து தின்றிருந்தன. குளிர் சாதனப்பெட்டி வேலை செய்யாதக் காரணத்தால் இந்த சம்பவம் நடைபெற்றதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்