ஊரடங்கு காரணமாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மற்றும் வீடற்ற மக்களுக்குத் தற்காலிக தங்குமிடம், உணவு, உடை, மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றை உடனடியாக ஏற்பாடு செய்து தரவேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,341 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் 6,02,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1,33,057 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 800 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 20 பேர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 66லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மற்றும் வீடற்ற மக்களுக்குத் தற்காலிக தங்குமிடம், உணவு, உடை, மருத்துவ பராமரிப்பு ஆகியவற்றை உடனடியாக ஏற்பாடு செய்து தரவேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பேரிடர் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீடற்ற மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் ஆகியோருக்கு தற்காலிக தங்குமிடம், உணவு, உடை, மருத்துவ பராமரிப்பு போன்றவற்றை ஏற்பாடு செய்யவேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்தப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.