mha about transport between states

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்குத் தடை விதிக்க வேண்டாம் என மாநிலச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடந்த மார்ச் மாதம் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், போக்குவரத்து மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது.

Advertisment

இந்நிலையில் மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்குப் போக்குவரத்துத் தடைப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசின் கட்டுப்பாடுகள்,வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது.