
உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத். பாஜகவைச் சேர்ந்த இவர் மீது, சக எம்.எல்.ஏக்கள், மாநில பாஜக தலைவர்கள் ஆகியோர் அதிருப்தியடைந்தனர். பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இவர்மீது அதிருப்தியடைந்துள்ளதாகதகவல் வெளியானது. மேலும்,திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் அடுத்துவரும் சட்டசபைத் தேர்தலை வெல்ல முடியாது என பாஜக மூத்த தலைவர்கள் கருதினார்கள்.
இதனையடுத்துதிரிவேந்திர சிங் ராவத் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய தலைமையின் ஆலோசனைக்குப் பிறகு தானாகவே பதவி விலகினார். அப்போது அவர், "இப்போது முதல்வராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கட்சி முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் இன்று (10.03.2021) உத்தரகண்ட் மாநில பாஜகவின் சட்டமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக திராத் சிங் ராவத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திராத் சிங் ராவத், தனது நாடாளுமன்ற பதவியை ராஜினமா செய்திவிட்டுமுதல்வர் பதவியில் அமரவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)