டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ். இயக்க பயங்கரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் தவுலா குவானில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக டெல்லி துணை போலீஸ் ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, லோதி காலனியில் உள்ள சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.