Published on 24/08/2022 | Edited on 24/08/2022

"சமூக மற்றும் ஆன்மீக நிறுவனங்கள் இணைந்து சுகாதார சேவையை வழங்குவது பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டுச் செயல்பாடு போன்றது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் ஹரியானா சென்ற பிரதமர் மோடி ஃபரிதாபாத்தில் புதிதாக கட்டப்பட்ட அம்ரிதா மருத்துவமனையை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் ஹரியானா மாநில ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி "இந்திய நாட்டில் மருத்துவமும் ஆன்மீகமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. நமது பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்களுக்கு இந்த நாடு மஹரிஷிகள் என்ற பட்டம் சூட்டியுள்ளது" என்றார். மேலும் "சுகாதாரத்துறையில் ஏற்பட்ட நவீன தொழில்நுட்பம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் எனவும் கூறினார்.