Published on 08/04/2020 | Edited on 08/04/2020
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் 5000க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியவில்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரப்பிரதேசம் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.