/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12_77.jpg)
பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று வரும் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். நேற்று ஈட்டி ஏறிதல் போட்டியில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்தது. துப்பாக்கிச் சுடுதலில் அவனி லெகரா தங்கப்பதக்கம் வென்றார். அதைப்போன்று வட்டு எறிதல் போட்டியில் யோகேஸ் கதுன்யா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர் 44.38 மீட்டர் வட்டு ஏறிந்து பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.
இந்நிலையில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் இன்று உயரம் தாண்டுதல் போட்டியில் களம் இறங்குகிறார். 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். தற்போது மீண்டும் அதே போன்று ஒரு சாதனை படைப்பாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று அவர் களம் காண்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)