Skip to main content

"இளைஞர்களுக்கு" வேண்டுகோள் விடுத்த பிரதமர் நரேந்திர மோடி!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலி வழியே “மன் கி பாத்” (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசினார்.
 

அப்போது, பெண்களின் உழைப்பு மற்றும் சாதனைகளை கொண்டாடும் விதமாக, ‘பாரத் கீ லட்சுமி’ "இந்தியாவின் லட்சுமிகள்" என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, அதில் பெண்களின் சாதனைகளை பதிவிடுமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மகாத்மா காந்தியின் 150- வது பிறந்தநாளின் போது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் உபயோகத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

MANNKI BAAT PROGRAM PM NARENDRA MODI REQUEST FOR OUR COUNTRY YOUNGSTERS


புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கும், இ சிகரெட் மற்றும் புகையிலை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இ சிகரெட்டுகள் உயிருக்கு கேடு விளைவிப்பவை என்று தெரிவித்த மோடி, அவை தொடர்பாக இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்று குறிப்பிட்டார். புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அதில் இருந்து விடுபடுவது கடினம் என்று கூறிய அவர், நிக்கோட்டினால் மன வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.
 

எனவே இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்தில் இருந்து இ சிகரெட்டுகள் பயன்பாட்டில் இருந்தும் விடுபட வேண்டும் என்றும் ஆரோக்கியான இந்தியாவைப் படைக்க வருமாறும் வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவை உலக நாடுகள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் நாட்டு மக்களுக்கு நவராத்திரி மற்றும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். 



 

சார்ந்த செய்திகள்