Skip to main content

எச்சரித்த அமித்ஷா; ஆயுதங்களை ஒப்படைத்த வன்முறையாளர்கள்

 

manipur state related incident amit shah related issue 

 

மணிப்பூர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த மாநிலத்தின் முதல்வராக பிரேன் சிங் இருந்து வருகிறார். இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு மற்ற பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

இதற்காகப் பழங்குடியினர் மாணவர் அமைப்பு நடத்திய பேரணியில் கலவரம் ஏற்பட்டு மணிப்பூரில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் இந்த கலவரத்தில் 80 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 4 நாள் பயணமாக கடந்த திங்கட்கிழமை மணிப்பூர் சென்றார்.

 

இந்நிலையில் மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா பலரையும் சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறுகையில், "வன்முறையில் ஈடுபடுபவர்கள் தாமாக முன்வந்து தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ என எச்சரித்திருந்தார். அமைச்சரின் இந்த எச்சரிக்கை குறித்து அதிகாரிகள் கூறுகையில், "மத்திய அமைச்சர் அமித்ஷாவின் எச்சரிக்கையை தொடர்ந்து பலர் தங்களிடம் இருந்த ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்து வருகின்றனர். இதுவரை ஏ.கே47 ரக துப்பாக்கி, ரைபிள், இலகு ரக இயந்திர துப்பாக்கி உள்பட 140 நவீன ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் தற்போது அமைதி நிலவுகிறது" எனத் தெரிவித்தனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !