Skip to main content

மணிப்பூரில் ஓயாத வன்முறை; ஆளுநர் அதிரடி உத்தரவு

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Manipur declaration as a state full of tension

 

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3 ஆம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

 

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, அந்த மாநிலத்தில் வன்முறை குறைகிறது என்று மாநில அரசு அவ்வப்போது கூறி வந்தாலும் அங்கு சில பகுதிகளில் வன்முறை நடந்த வண்ணம் தான் இருந்தது.

 

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தைப் பதற்றம் நிறைந்த பகுதியாக அறிவித்து அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கே உத்தரவிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் மாநில அரசின் நிர்வாகத்திற்கு உதவியாக ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் மணிப்பூர் மாநிலத்தில் இம்பால், லாம்பல்ம் சிங்ஜமேய் உள்ளிட்ட 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

முன்னதாகக் கடந்த ஜூலை மாதம் காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்களின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. இது தொடர்பாகத் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிகளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் மணிப்பூர் மாநில அரசு உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மது அருந்த பணம் தராத மனைவி; அடித்தே கொன்ற கணவன்

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
husband beat his wife to passed away because she didn't pay him to drink liquor

மகராட்ஷ்ரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர்கள் மொய்தினுதின் அன்சாரி(42) - பர்வீன்(26) தம்பதியினர். இந்த நிலையில் மொய்தினுதின் அன்சாரிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அன்சாரி தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், இதனிடையே கணவர் அன்சாரி மனைவி பர்வீனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டும் தகராறு செய்து வந்திருக்கிறார். 

இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் கணவர் அன்சாரி மனைவி பர்வீனிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று பர்வீன் கூற ஆத்திரமடைந்த அன்சாரி அவரை பலமாக தாக்கிவிட்டு வீட்டில் இருந்து தப்பித்து சென்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பர்வீனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் பர்வீனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் மருத்துவமனை வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்; என்.ஐ.ஏ ஆய்வு

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
 NIA officials inspect in front of Guindy Governor House

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசினார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மொத்தமாக, பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக காவல்துறை என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் அண்மையில் ஒப்படைத்தது.

இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒன்றரை மணி நேரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தன்று பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சில்வான் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை புரசைவாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சில்வானிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறவுள்ளனர்.