Skip to main content

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உட்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு!

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

நாடு முழுவதும் இஸ்லாமியர் மற்றும் பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், ஷியாம் பெனகல், ராமச்சந்திரா குகா, அபர்ணா சென், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் எழுதினர்.

Mani Ratnam's letter to PM Modi  49 celebrities IMPACT treason CASE  FILED IN BIHAR

இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் நீதிமன்றத்தில் இரண்டு மாதங்ளுக்கு முன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை பீகார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றம் விசாரித்தது. கடிதத்தில் கையெழுத்திட்டிருந்த திரைப்பிரபலங்கள் மீது முசாபர்பூர் காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

34 மாதங்களுக்குப் பிறகு ஹரி நாடாருக்கு ஜாமீன்!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Hari Nadar gets bail after 34 months

திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹரி நாடார். இவர் மீது பைனான்ஸ் தொழில் செய்து வந்ததுடன் ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை என்ற  கட்சியில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். அதே சமயம் இவர் மீதான சுமார் 16 கோடி பண மோசடி வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் கடற்கரையை ஒட்டியுள்ள நட்சத்திர விடுதியில் வைத்து பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

அதன் பின்னர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கிலும், மற்றொரு பண மோசடி வழக்கிலும், ராக்கெட் ராஜாவுக்கு ஆதரவாக அரசு பேருந்தை எரித்த வழக்கிலும் ஹரி நாடாருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைத்த நிலையில் பண மோசடி வழக்கில் மட்டும் ஜாமீன் கிடைக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் பணமோசடி வழக்கில் ஜாமீன் கோரி ஹரி நாடார் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று (22.02.2024) விசாரித்த பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றம் 34 மாதங்களாக சிறையில் உள்ள ஹரி நாடாருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஓரிரு நாளில் ஹரி நாடார் விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தமிழகத்திலேயே சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் அதாவது 37 ஆயிரத்து 726 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘உனக்கொரு எல்லை உலகத்தில் இல்லை’ - சாதனை படைத்த அஸ்வின்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ashwin who took 500 wickets in Test match

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளன. நேற்று (15ம் தேதி) குஜராத் மாநிலம், ராஜ்கோட் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார் ஆகியோர் வந்த வேகத்திலேயே தங்களது விக்கெட்களை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால் 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாற்றத்தில் இருந்தது. பிறகு ஜோடி சேர்ந்த ஜடேஜாவும், ரோஹித் ஷர்மாவும் அணியின் ஸ்கோரை 33ல் இருந்து 237க்கு கொண்டுவந்தனர். அப்போது ரோஹித் தனது விக்கெட்டை இழக்க அறிமுக ஆட்டக்காரரான சர்பராஸ் கான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜடேஜா 225 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க,  அடுத்தடுத்து வந்த  அஸ்வின் 37(89), துருவ் ஜோரல் 46(104), பும்ரா 26(28) விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 445 ரன்களை எடுத்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது. 

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் க்ராலி மற்றும் டக்கர் இருவரும் இறங்கினர். இந்த நிலையில், ஜாக் க்ராலி 15(28) விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 87 இன்னிங்ஸ்களில் ஸ்ரீலங்கா வீரர் முரளிதரன் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த நிலையில், தற்போது 98 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர் அஸ்வின் 500 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.