Skip to main content

அயன் பட பாணியில் நடந்த சம்பவம்; சுற்றி வளைத்த அதிகாரிளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
 man who was selling gold in the style of Ayan movie was at Trichy Airport

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு துபாயில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து சேர்ந்தது. அதில் வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தததில் அவருடைய வயிற்றுக்குள் சிறிய அளவிலான உருண்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நபரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, அனுமதி பெறப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் அழைத்து சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தததில் அவருடைய வயிற்றுக்குள் 12 உருண்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதையடுத்து மருத்துவர்கள் சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த 12 உருண்டைகளை பத்திரமாக வெளியே எடுத்தனர். இந்நிலையில் அந்த உருண்டைகளை சோதனை செய்தததில் பசை வடிவிலான தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை உருக்கி தனியாக பிரித்து எடுத்ததில் 306 கிராம் எடையுள்ள தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாக்கா அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அண்ணனை கொலை செய்த தம்பி; உடந்தையாக இருந்த தாயும் கைது

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
The brother who attack his brother; The accomplice mother was also arrested

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை தம்பி கொலை செய்ததும், அதற்கு உடந்தையாக இருந்த தாயும் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பீமநகர் சேர்ந்தவர் பர்வீன் பானு (வயது 48). இவருக்கு தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாஹிர் ( 29) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் தமிமுன் அன்சாரி ஆட்டோ டிரைவராகவும், டீ மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

குடி போதைக்கு அடிமையான தமிமுன் அன்சாரியின் நடவடிக்கை பிடிக்காததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் தினமும் தமிமுன் அன்சாரி தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். நேற்று இரவு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு அடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட தம்பி சையது அபுதாஹிர் வீட்டில் இருந்த  அரிவாளால் தமிமுன் அன்சாரியின் தலையில் வெட்டினார். இருப்பினும் ஆத்திரம் அடங்காமல் அவரது கழுத்தில் மின்வயரை சுற்றி இறுக்கினார். இதில் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே தமிமுன் அன்சாரி இறந்து விட்டார். விபரீதத்தை உணர்ந்த பர்வீன் பானு அதிகாலை 4 மணி அளவில் யாரும் அறியாத வகையில் சையது அபுதாகீருடன் சேர்ந்து தமிமுன் அன்சாரியின் உடலை அவரது ஆட்டோவிலேயே ஏற்றிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றில் நீரில் போட்டு விட்டு வர முடிவு செய்தார்.

அதன்படி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உடலை இறக்கும் போது இருசக்கர வாகனங்கள் வரவே உடலை அங்கேயே போட்டுவிட்டு ஆட்டோவில் தப்பி விட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.பாலத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவினை ஆய்வு செய்து ஆட்டோ நம்பரை கண்டுபிடித்தனர். பின்னர் ஆட்டோ உரிமையாளர் யார்?  மாநகர  சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் கொலையாளிகள் பர்வீன் பானு மற்றும் சையது அபுதாகிர் என உறுதி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

விண்டோஸ் முடக்கம் எதிரொலி; சென்னையில் 8 விமானங்கள் ரத்து

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
echo windows shutdown; 8 flights canceled in Chennai

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் விண்டோஸ் (Windows) மென்பொருள் முடங்கியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பத்துறை, வங்கி, விமானம், ரயில், மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) என்ற அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் விண்டோஸை புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ப்ளு ஸ்கிரின் எரர் ( Blue Screen Error) ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட உலகம் முழுவதும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடட் உள்ளிட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு விமான சேவைகள் தாமதமாகும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விண்டோ செயலி முடக்கத்தால் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக  சென்னையில் எட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் இதன் காரணமாக தாமதமாக இயக்கப்பட்டது.

மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, ஹைதராபாத், கோவை, பெங்களூர், லக்னோ, மும்பை போன்ற பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லும் விமானங்களின் சேவை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாகியுள்ளது. இந்த சூழலில் அடுத்த கட்டமாக பயணம் மேற்கொள்வதற்கு பயணிகள் தொடர்ச்சியாக நீண்ட வரிசையில் நின்று உள்ளதால், செக் இன் படிவங்கள் கையால் எழுதிக்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 8 விமானங்களின் பயண சேவைகள் தொடங்க தாமதமாகும் எனவும், இந்த தாமதத்தினால் சென்று சேர வேண்டிய இடத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மும்பை, லக்னோ, ஹைதராபாத், டெல்லி ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லக்கூடிய எட்டு விமானங்கள் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மென்பொருள் சேவை மீண்டும் துவங்கிய பின் விமான சேவை சீராகும் எனவும் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.