பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே ஸோட்டி டெயிலோரி கிராமத்தைச் சேர்ந்தவர் அஷோக் யாதவ். இவரது மனைவியின் பெயர் நீலம் தேவி. நீலம் தேவி கடந்த சனிக் கிழமை அன்று அருகில் உள்ள சந்தைக்குப் பொருட்களை வாங்கச் சென்றுள்ளார்.
சந்தையின் நடுவே ஷகீல் என்ற நபர் இறைச்சி வெட்டும் கத்தியினை கொண்டு திடீரென நீலம் தேவியைத் தாக்கியுள்ளார். நிலை தடுமாறி விழுந்த நீலம் தேவியினை ஷகீல் இறைச்சி வெட்டும் கத்தியினை கொண்டு கைகள், காதுகள், மூக்கு மற்றும் மார்பகங்களை வெட்டியுள்ளார். கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஷகீலை மக்கள் தடுக்க நினைத்தும் முடியவில்லை.
இதனை தொடர்ந்து அங்கு இருந்த மக்கள் பார்பைண்டி காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். எனினும் ஷகீல் அங்கு இருந்து தப்பிவிட்டார். தாக்குதலுக்கு உண்டான நீலம் தேவியை அங்கு இருந்த மக்கள் பாகல்பூர் ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே தாக்குதலுக்கு உள்ளான நீலம் தேவியை அடையாளம் கண்டு கொண்ட மக்கள் அவரது கணவர் அஷோக் யாதவிற்கு தகவல் தெரிவித்தனர். அஷோக் யாதவ் மருத்துவமனைக்கு விரைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நீலம் தேவி உயிரிழந்து விட்டதாத நீலம் தேவியை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதல் குறித்து நீலம் தேவியின் கணவர் அஷோக் யாதவ் கூறிகையில் எங்களுக்கும் ஷகீலுக்கும் எந்த வித முன் பகையும் இல்லை. அப்படி இருக்கையில் ஏன் இவ்வாறு செய்தார் எனத் தெரியவில்லை என்றார்.
நீலம் தேவியை பரிசோதித்த மருத்துவர் கிருஷ்ணா கூறுகையில், அவரது கைகள் மற்றும் மார்பகங்கள் முழுவதும் வெட்டப்பட்ட நிலையிலிருந்தது. அவரது முதுகில் ஆழமான காயங்கள் இருந்தன. கூரிய ஆயுதத்தைக் கொண்டு தாக்கியதால் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்.
இந்நிலையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவரைத் தேடி வருகின்றனர். மேலும் தாக்குதலுக்கான காரணங்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.