Published on 28/01/2019 | Edited on 28/01/2019

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 14 மாநிலங்களில் போட்டியிடபோவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரைன் கூறியுள்ளார். ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். பாஜக வுக்கு எதிராக மகா கூட்டணியில் அமைந்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்ற கூட்டணி கட்சிகளின் உதவியோடு இதனை செய்யும் முனைப்பில் இறங்கியுள்ளது. 14 மாநிலங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக கூறியிருந்தாலும் அவை எந்தெந்த மாநிலங்கள் என இன்னும் அக்கட்சியால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.