மேற்கு வங்கத்தில், இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அம்மாநில அரசியலில் மிகுந்த பரபரப்பு நிலவிவருகிறது. கடந்த வருட இறுதியில் அமித்ஷா தலைமைலயிலான பொதுக்கூட்டத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி, மேலும் 6 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் பாஜகவில் இணைந்தார்.
இந்தநிலையில், மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர் லக்ஷ்மிரத்தன் சுக்லா, இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது, மேற்கு வங்க அரசியலில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து மம்தா பானர்ஜி, "யார் வேண்டுமானாலும் பதவி விலகலாம். லக்ஷ்மிரத்தன் சுக்லா விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தர விரும்புவதாகவும், எம்.எல்.ஏ.வாக தொடர்வதாகவும் தனது ராஜினாமா கடிதத்தில் எழுதியுள்ளார். அதனை எதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.