Skip to main content

“எங்களுக்கு எதிராக நான்கு வேட்பாளர்களை பா.ஜ.க நிறுத்தியுள்ளது” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

Mallikarjuna Kharge says BJP has fielded four candidates against us

 

ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநிலத்திற்கு இந்த வருட இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாகக் களப்பணி செய்து வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். 

 

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “நாங்கள் பா.ஜ.க.வுடன் மட்டும் போராடவில்லை. இந்த தேர்தலில் எங்களுக்கு எதிராக பா.ஜ.க.வினர் நான்கு வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ளனர். ஒன்று அவர்கள், அடுத்து அமலாக்கத்துறை, மற்றொன்று சி.பி.ஐ, அடுத்தது வருமான வரித்துறையினர். நாங்கள் இவர்களுக்கு எதிராக நின்று வெற்றி பெற வேண்டும். பா.ஜ.க.வினருக்கு தோன்றும் போதெல்லாம் அமலாக்கத்துறையினரையோ அல்லது சி.பி.ஐ.யோ வெளியே விடுகிறார்கள். குறிப்பாக, எங்களுடைய கூட்டம் நடக்கும் போதோ அல்லது கட்சிகளை சார்ந்த நிகழ்ச்சி நடக்கும்போதோ எங்கள் மீது சோதனை நடத்துகிறார்கள். 

 

காங்கிரஸ் கட்சியில் அனைத்து சமூகத்தினரும் இருக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க யாரையும் அருகில் வரவிடுவதில்லை. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரெளபதி முர்முவை கூட அழைக்கவில்லை. சினிமா துறையை சார்ந்தவர்கள் அழைத்தார்கள். ஆனால், குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை? அவர் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி. நீங்கள் ஜனாதிபதியை அவமதித்து விட்டீர்கள். புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அஸ்திவாரம் போட்டபோது கூட அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. ஏனென்றால், அவர் உங்கள் பார்வையில் தீண்டத்தகாதவர். ஒரு தீண்டத்தகாதவர் அடித்தளம் அமைத்திருந்தால், அவர்கள் அதை கங்கை நீரின் மூலம் கழுவ வேண்டியிருக்கும்” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜ்புத் இயக்கத் தலைவர் கொலை; ரயில், சாலை மறியல் போராட்டம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Rajput movement leader lost his life so Rail and road strike

 

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தவர் சுக்தேவ் சிங் சோகமெடி. இவரது வீடு ஜெய்ப்பூரில் உள்ள ஷ்யாம் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், இவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், சுக்தேவ் சிங் வழக்கம் போல் தனது வீட்டில் இருந்தார். அப்போது, திடீரென்று அவரது வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கிடையே, சுக்தேவ் சிங் தரப்பிலும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுக்தேவ் சிங், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதனையடுத்து, சுக்தேவ் சிங்கின் பாதுகாவலரும், இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தை நடத்திய அந்த மர்ம நபர்களைக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுக்தேவ் சிங் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

 

இதை தொடர்ந்து, கர்னி சேனா அமைப்பினர், சுக்தேவ் சிங்கின் கொலையை கண்டித்து  ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், மோதபூர், பண்டி, அஜ்மீர், சவாய், கோடா, சிதோர்கர், ஜலாவர், பாரன் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. 

 

 

 

Next Story

ராஜ்புத் இயக்கத் தலைவர் சுட்டுக் கொலை; வலுக்கும் போராட்டம்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Rajput Movement leader lost his life and protest to get stronger

 

ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தவர் சுக்தேவ் சிங் சோகமெடி. இவரது வீடு ஜெய்ப்பூரில் உள்ள ஷ்யாம் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. இவருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், சுக்தேவ் சிங் வழக்கம் போல் தனது வீட்டில் இருந்தார். அப்போது, திடீரென்று அவரது வீட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த சுக்தேவ் சிங் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கிடையே, சுக்தேவ் சிங் தரப்பிலும் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த சுக்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதனையடுத்து, சுக்தேவ் சிங்கின் பாதுகாவலரும் இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தக் கொலை சம்பவத்தை நடத்திய அந்த மர்ம நபர்களைக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுக்தேவ் சுங் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவத்தை எதிர்த்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.