Skip to main content

“எரிகிற நெருப்பில் எரிபொருளை சேர்க்கிறது பா.ஜ.க” -  மல்லிகார்ஜுன கார்கே

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 Mallikarjuna Kharge says BJP adds fuel to burning fire

 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ, மும்பை என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. இந்தியா கூட்டணியின் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முடிவடைந்த நிலையில், அதன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் சரத்பவார் இல்லத்தில் நடைபெற்றது. கே.சி. வேணுகோபால், டி.ஆர். பாலு உட்பட 14 பேர் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

 

இந்த நிலையில், தெலங்கானாவின் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹைதராபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், முதல் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காரிய கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “மூன்று வெற்றிகரமான ஆலோசனைக் கூட்டங்களுக்கு பிறகு, மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத பா.ஜ.க.வை எதிர்த்து போராட முன்னேறி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இந்தியா கூட்டணியின் வளர்ச்சியால் குழப்பமடைந்த பா.ஜ.க ஆட்சியானது, எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்கிறது. 

 

மணிப்பூரில் இன்னும் சோகமான நிகழ்வுகள் வெளிவருவதை முழு தேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. மணிப்பூரின் நெருப்பு ஹரியானாவில் நூஹ்வை அடைய, மோடி அரசாங்கம் அனுமதித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களால், முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பா.ஜ.க அரசு, வகுப்புவாத அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் என அனைவரும் எரிகிற நெருப்பில் எரிபொருள் சேர்க்கின்றனர்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு கார்கே சரமாரி கேள்வி!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
For Prime Minister Modi, Karke barrage of questions

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பிரதமர் மோடி அறிவித்த ‘மேக் இன் இந்தியா’ என்ற திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது. தொழில் உற்பத்தித் துறையில் அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் முற்றிலும் செயலற்றுவிட்டது. 

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தியால் சேர்க்கப்பட்ட மதிப்பு 16%லிருந்து 13% ஆக ஏன் குறைந்துள்ளது? மோடி அரசின் கீழ் உற்பத்தித் துறையின் சராசரி வளர்ச்சி ஏன் சரிந்தது? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 7.85% ஆக இருந்தது. இப்போது, அது கிட்டத்தட்ட 6% ஆகக் குறைந்தது. மோடி அரசு 2022க்குள் உற்பத்தித் துறையில் 10 கோடி வேலைகளை வழங்குவதாக உறுதியளித்தது. அந்த வேலைகள் எங்கே? கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் தொழிலாளர் எண்ணிக்கை ஏன் குறைந்துள்ளது? உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தில் பெரும்பாலானவை செயல்படத் தவறியது ஏன்?

முக்கிய துறைகளுக்கான நிதியில் பாரிய அளவில் பயன்படுத்தப்படாதது ஏன்? ஜவுளித் துறையில் பிஎல்ஐக்கான 96% நிதி பயன்படுத்தப்படவில்லை. ஏ.சி.கள் மற்றும் எல்.இ.டி.யின் பாகங்கள் மற்றும் துணை பாகங்கள் தயாரிப்பதற்காக வெள்ளைப் பொருட்களில் பிஎல்ஐக்கான 95% நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 549% ஆக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் மோடி ஆட்சியின் போது 90% ஆக சரிந்தது எப்படி? இந்தியாவிற்கு தேவையானது வலுவான மற்றும் உள்ளடக்கிய வேலை வாய்ப்பு உருவாக்கம் ஆகும். உயர் தொழில்நுட்ப நெட்வொர்க்குகளை இணைப்பதன் மூலம் வேலைகளை உருவாக்குபவர்களின் திறன்களை ஊக்குவிப்பது மற்றும் உற்பத்தியை ஒழுங்குபடுத்துவது அவசியம். உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மதிப்பு கூட்டுதலில் கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பா.ஜ.க எம்.பியுமான கெளதம் கம்பீர் அதிரடி அறிவிப்பு!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Former cricketer and BJP MP Gautam Gambhir action announcement

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் எம்.பி.யாக பொறுப்பு வகித்து வந்தார். இவர் இன்று (02-03-24) திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து, கவுதம் கம்பீர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் நான் கவனம் செலுத்துவதற்காக எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.