Skip to main content

சரத்பவாரின் புகழுக்கு தன்னால் களங்கம் ஏற்படுவதாக கூறி பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் புகழுக்கு தன்னால் களங்கம் ஏற்படுவதால் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக அஜித் பவார் அறிவித்துள்ளார். இதனால் அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின், சகோதரி மகனான அஜித் பவார், பாராமதி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தார். அதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, அதற்கான கடிதத்தை அம்மாநில சபாநாயகரின் செயலரிடம் வழங்கினார். இதனால் அக்கட்சியின் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Maharashtra  state assembly election nationalist  congress party senior leader resign


மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் 25 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித் பவார் உள்ளிட்ட 75 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அம்மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அஜித் பவார், மாநில கூட்டுறவு வங்கி ஊழலில் தன்னுடைய பெயர் இருப்பதாகவும், அதனால் கட்சிக்கும், சரத்பவாரின் களங்கம் ஏற்படுவதால் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமாக செய்ததாக கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி முறைகேட்டில் சரத்பவாருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினார். 

Maharashtra  state assembly election nationalist  congress party senior leader resign


சரத்பவாரை கலந்து ஆலோசிக்காமல் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அஜித் பவார் எடுத்ததால், சரத்பவார் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 21- ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சமயத்தில் மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கி விவகாரம், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மக்களுக்காக போராடுபவர்கள்; ரவுடி பட்டியலில் சேர்த்து பழி வாங்கும் காவல்துறை!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
 Those who fight for the people; The police will take revenge by adding it to the list of raiders!

ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுகிறவர்களை பொய் வழக்கு போட்டு சிறை அனுப்புவதை சில சமயம் காவல்துறை செய்வதுண்டு, இதே போல் மயானம் செல்ல அடிப்படை வசதி செய்து தர போராடிய விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவரை ரவுடி பட்டியலில் இணைத்து பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது காவல்துறை.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது பூவலை கிராமம். சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த கிராமத்தின் ஒரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இருளர் இன மக்கள் பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த 28 சென்ட் பரப்பளவிலான மயானம் மற்றும் மயானத்துக்கு செல்லும் பாதை ஆகியவற்றை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இதனால், பூவலை இருளர் இன மக்களில் யாராவது ஒருவர் உயிரிழந்தால், உடலை பல்வேறு இன்னலுக்கு இடையே மயானத்தில் புதைத்தல் மற்றும் எரியூட்டும் நிலை நீடித்து வந்தது.

இது தொடர்பாக, இருளர் இன மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை சார்பில், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டன. வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை, உயிரிழந்தவரின் உடலோடு போராட்டம் என பல போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இது தவிர இந்த பிரச்சனை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், பூவலை கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 28 சென்ட் நிலம், இருளர் இன மக்களின் மயான நிலம் எனவும், மயானத்துக்கு செல்லும் வழி உட்பட, மயானத்தையொட்டியுள்ள சுமார் 4.70 ஏக்கர் நிலம் அனாதையாக விடப்பட்ட நிலம் எனவும் அறிவித்தது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், கடந்த 2021-ம் ஆண்டு பூவலைகிராமத்தில் உள்ள சம்பந்தப்பட்ட 28 சென்ட் நிலத்தை மயானம் எனவும், மயானத்தை ஒட்டியுள்ள, மயான பாதை உட்பட 4.70 ஏக்கர் நிலத்தைபுஞ்சை அனாதையாக விடப்பட்ட நிலம் எனவும், கும்மிடிப்பூண்டி வட்டம் மற்றும் பூவலை கிராம கணக்குகளில் உரிய மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வருவாய்த் துறையினர், ’சம்பந்தப்பட்ட நிலங்களில் உள்ள சுற்றுச் சுவரை அகற்றி, நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது’ என்ற எச்சரிக்கை பலகையும் வைத்தனர்.

 Those who fight for the people; The police will take revenge by adding it to the list of raiders!
விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அருள்

இந்த போராட்டங்களை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்தது. இந்த போராட்டம் தொடர்பாக முனிரத்தினம், பிரபாகரன், அருள் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற போது நீதிபதியிடம் இவர்களை நக்சலைட் என்று சொல்லியிருக்கிறது காவல்துறை தரப்பு, இதை பொய்யான குற்றச்சாட்டு என்பதை உணர்ந்த நீதிபதி  “அப்போது ஏன் இன்னும் ஒரு வழக்கு கூட போடாமல் வைத்திருந்தீர்கள்”, “இது பொய் குற்றச்சாட்டு தானே” என்று காவல்துறையினை கேட்டு நீதிபதி கண்டித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையைத் தொடர்ந்து தற்போது விவசாயிகள் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி மாவட்டச் செயலாளர் ஜெ.அருளை ரவுடி பட்டியலின் இணைத்து காவல்துறை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

இது தொடர்பாக அருளை தொடர்பு கொண்டு பேசிய போது “மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்ததற்காக என்னை ரவுடிகள் பட்டியலில் ஆறு மாதங்களுக்கு முன்பு இணைத்திருக்கிறார்கள். அடிக்கடி வீட்டிற்கு வந்து குடும்பத்தினரை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் வந்து மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இது உளவியல் ரீதியாக மக்களுக்காக போராடுகிறவர்களை ஒடுக்குவதற்கு எடுக்கிற யுக்தியாகும். என் மீது எதாவது பொய் வழக்கு போடப்படுமேயானால் அது திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கும்” என்கிறார்.

விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளரை இருளர் மக்களுக்கான அடிப்படை தேவைகளுக்காக போராடியதற்காக குற்றவழக்கு சம்பவ பிண்ணனி சார்ந்தவரைப் போல ரவுடி பட்டியலில் இணைத்தது தவறான செயல் என்று சமூக ஆர்வலர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

Next Story

'இளையராஜா உரிமை கோர முடியாது'-எக்கோ நிறுவனம் வாதம்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
'Ilayaraja cannot claim'-Echo company's argument

இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு உரிமை கோர முடியாது என எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வாதங்களை வைத்துள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாக எக்கோ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்து இருந்தது. இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் முகமது ஷாபிக் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர் தான் பாடல்களின் முதல் காப்புரிமை உரிமையாளர்கள். மேலும் பதிப்புரிமை தொடர்பாக பட தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்து 4500 பாடல்களை எக்கோ நிறுவனம் வாங்கியுள்ளது. இளையராஜா உடன் தாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும் 1990 ஆம் ஆண்டு வரை இளையராஜாவுக்கு ராயல்டி வழங்கி வந்ததாகவும் அதன்பின் நிறுத்திவிட்டதாகவும் வாதங்களை வைத்தார்.

இசையை திரித்தாலோ அல்லது பாடல் வரிகளை மாற்றினாலோ இசையமைப்பாளருக்கு தார்மீக உரிமை வரும். சமீபத்தில் தன்னுடைய பாடல் திரிக்கப்பட்டதாக 'மஞ்சள் மல்' பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என எக்கோ நிறுவன வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அப்பொழுது இளையராஜாவை கௌரவப்படுத்தியதாக 'மஞ்சள் மல்' இயக்குநரும் தயாரிப்பாளரும் கூறியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிப்புரிமை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால் இளையராஜா பட தயாரிப்பாளருக்கு தன்னுடைய உரிமை வழங்கி விட்டார். உரிமை வைத்திருக்க விரும்பினால் ஒப்பந்தம் செய்ய வேண்டும். எந்த ஒப்பந்தமும் செய்யாத நிலையில் இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது என எக்கோ தரப்பு வாதங்களை வைத்தது. எக்கோ நிறுவன தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இளையராஜாவின் தரப்பு வாதத்திற்காக இந்த வழக்கு விசாரணை ஜூன் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.