Skip to main content

ராமர் ஊர்வலத்தில் கலவரம்; புல்டோசர் நடவடிக்கையைக் கையில் எடுத்த மாநில அரசு

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Maharashtra has taken up the bulldozer operation ar Riots in Ram Procession

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம்(22.1.2024) ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். அதன் பிறகு, கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. 

இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நேற்று முன்தினம் (22-01-24) ராமர் பக்தர்கள் ஆங்காங்கே ஊர்வலம் நடத்தினர். அந்த வகையில், மும்பை அருகில் உள்ள மீரா ரோடு பகுதியில் இருக்கும் நயா நகரில், இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். அப்போது, ஒரு கும்பல் பைக் மற்றும் காரில் காவி கொடியுடன் ஊர்வலம் நடத்தியவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், வாகனங்கள் சேதம் அடைந்து சிலர் காயம் அடைந்தனர். வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் எதிர்த் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு வன்முறை ஏற்பட்டது. 

இதையடுத்து, நயா நகரில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அந்த பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்தார். இரு தரப்பினர் மோதிக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு முக்கிய காரணம் நயா நகரின் ஆக்கிரமிப்பு இடங்களில் வசித்து வருபவர்கள்தான் என அரசு சார்பில் சட்ட விரோதமான 15 இடங்களை இடித்துத் தள்ள முடிவு செய்தது. இதனால், அந்த பகுதிக்கு புல்டோசர் கொண்டு வரப்பட்டு, சட்டவிரோத இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் இடித்துத் தள்ளப்பட்டன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக முதல்வர் யோகி ஆதித்யநாத், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக புல்டோசர் மூலம் இடங்களை இடித்து நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில், மகாராஷ்டிராவிலும் இந்த புல்டோசர் நடவடிக்கை தொடர்ந்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சர்ச்சைகளில் சிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் குடும்பம்; பூஜாவின் தாயார் அதிரடி கைது!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
IAS officer's family embroiled in controversies and Pooja's mother arrested

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பூஜா கேட்கர், உதவி ஆட்சியராக சேருவதற்கு முன்பு தனக்கென தனி அலுவலகம், கார் மற்றும் வீடு வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் நச்சரித்து வந்ததாகக்  கூறப்பட்டது. மேலும்,  புனே கூடுதல் ஆட்சியர் அஜய் மோரே வெளியே சென்றபோது, அவரது அறைக்கு வெளியே இருந்த கூடுதல் ஆட்சியரின் பெயர் பலகையை தூக்கிவிட்டு, பூஜா கேட்கர் தனது பெயர் பலகையை மாற்றி அந்த அறையை ஆக்கிரமித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் ஒப்பந்தக்காரர் ஒருவர் கொடுத்த விலை உயர்ந்த சொகுசு காரில் விதியை மீறி சைரன் வைத்துக் கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், ஓய்வு பெற்ற மகாராஷ்டிரா அரசு அதிகாரியான பூஜாவின் தந்தை திலீப் கேத்கர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், பூஜா கேட்கர் பொருளாதாரத்தில் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பர் சேர்ந்தவர் எனக் கூறியும், பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி எனப் போலி சான்றிதழ் வழங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனதாக சர்ச்சை எழுந்தது. பூஜா கேட்கர் மீதான புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு, தனி நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. 

இதனையடுத்து, பூஜா கேட்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்து மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே, சாலையோர நடைபாதையை பூஜாவின் குடும்பத்தினர் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, புனே நகராட்சி சார்பில் அனுப்பிய நோட்டீஸூக்கு பூஜாவின் குடும்பத்தினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படாததால் புல்டோசர் மீது பூஜாவின் ஆக்கிரமிப்பு தடுப்புச்சுவர் நேற்று இடிக்கப்பட்டது. 

இந்த நிலையில், பூஜாவின் தாயார் மனோரமா கேட்கரை போலீசார் கைது செய்துள்ளனர். நில விவகாரம் தொடர்பாக, புனே மாவட்டம் தத்வாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரை, மனோரமா கேட்கர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது.  இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் புனே போலீசார், பூஜாவின் தாயார் மனோரமா கேட்கரை கைது செய்துள்ளனர். 

Next Story

ரீல்ஸ் எடுக்க முயன்ற இன்ஸ்டாகிராம் பிரபலம்; அடுத்து நடந்த விபரீதம்!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Instagram celebrity who tried to take reels in maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் ஆன்வி கம்தார் (27). இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வந்துள்ளார். 

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்களை கொண்ட ஆன்வி கம்தார், ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு அவரது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது, நீர்வீழ்ச்சியின் அருகே அவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். 

இதில் பதற்றமடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு குழுவினர், பள்ளத்தில் விழுந்த ஆன்வி கம்தாரை தீவிரமாக தேடி வந்தனர். ஆறு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தினர். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது பள்ளத்தில் விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.