Skip to main content

ஆட்டோ ஓட்டுநருடன் காதல்; இந்திய மருமகள் ஆன பெல்ஜிய நாட்டு பெண்

Published on 27/11/2022 | Edited on 27/11/2022

 

Love with Auto Driver; A Belgian woman who became an Indian daughter-in-law

 

கர்நாடக மாநிலம் ஹம்பிக்கு சுற்றுலா வந்த பெல்ஜியம் இளம்பெண் ஆட்டோ ஓட்டுநரைக் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

 

கர்நாடக மாநிலம் ஹம்பியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் ராஜ். அவர் வெளிநாட்டுப் பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாகவும் செயல்படுகிறார். நான்காண்டுகளுக்கு முன் பெல்ஜியத்திலிருந்து  கெமில் என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தார். சுற்றுலா வழிகாட்டியான ஆனந்த் ராஜ் அவர்களுக்கு உதவி செய்தார். 

 

ஆனந்த் ராஜ் மற்றும் கெமிலுக்கும் இடையே நல்லதொரு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனந்த் ராஜின் நேர்மையைப் பார்த்த கெமில் அவரை காதலித்துள்ளார். இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து இருவரும் காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் மூன்றாண்டுகளுக்கு முன் திருமணம் செய்ய இருந்தனர்.

 

கொரோனா காலகட்டம் என்பதால் நான்காண்டுகள் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இணையத்திலும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
POCSO case against BJP leader Yeddyurappa

பா.ஜ.க மூத்த தலைவரான எடியூரப்பா, கர்நாடகா மாநிலத்தின், முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்படும் 17 வயது சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தனது மகளுடன், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் தொந்தரவு செய்ததாகவும்’ கூறப்பட்டுள்ளது. 

இந்த புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், எடியூரப்பா மீது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, அவர் இன்று (15-03-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “என் மீது பெண் ஒருவர் புகார் அளித்திருப்பது தெரிய வந்தது. அவர்கள், ஒரு மாதமாக என் வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார்கள். நான் அதை கவனிக்கவில்லை. ஆனால், ஒரு நாள் எனது பணியாளர்கள் அந்த பெண் அழுகிறார் என்று சொன்னார்கள். அதை கேட்டதும், அப்பெண்னை அழைத்து என்ன நடந்தது? என்று கேட்டேன். அப்போது, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக என்னிடம் கூறினார்கள்.

அதனால், இது தொடர்பாக நான் தனிப்பட்ட முறையில் போலீஸ் கமிஷனரை அழைத்து அப்பெண்ணுக்கு உதவுமாறு கூறினேன். ஆனால், அப்போதே அந்த பெண் என்னை எதிர்த்து பேச ஆரம்பித்தார். அந்த பெண்ணுக்கு உடம்பு சரியில்லை என்று நினைத்து போலீஸ் கமிஷனரை விசாரிக்கச் சொன்னேன்.  அவர்களுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்திருந்தேன். இப்போது, இதை திரித்து என் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. ஒருவருக்கு உதவி செய்தால் இப்படி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். இது ஒரு அரசியல் சதி என்று நான் நினைக்கவில்லை, ஒரு பெண் புகார் அளித்துள்ளார், நாங்கள் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்” என்று கூறினார் 

Next Story

“பெரும்பான்மை கிடைத்ததும், அரசியல் சாசனத்தையே மாற்றுவோம்” - பா.ஜ.க எம்.பியின் சர்ச்சை பேச்சு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
karnataka BJP MP' said Once we get the majority, we will change the constitution

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைத்ததும் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறி பா.ஜ.க எம்.பி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தின் சித்தாபூர் பகுதியில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் கர்நாடகா பா.ஜ.க. எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் ஹெக்டே கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “அரசியலமைப்பை திருத்துவதற்கும், காங்கிரஸால் அதில் செய்யப்பட்ட திரிபுகள் மற்றும் தேவையற்ற சேர்த்தல்களை சரிசெய்வதற்கும் பாஜகவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை.

இந்து சமுதாயத்தை ஒடுக்கும் நோக்கத்தில் சட்டங்களைக் கொண்டுவந்து, அரசியலமைப்பை காங்கிரஸ் அடிப்படையிலேயே சிதைத்தது. தேவையற்ற விஷயங்களை  நீக்க, குறிப்பாக இந்து விரோத விஷயங்களை நீக்க அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இவை அனைத்தையும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாமல் செய்யமுடியாது” என்று பேசினார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு, காங்கிரஸ் கட்சியினர் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அரசியல் சட்டத்தை மாற்ற 400 இடங்கள் தேவை என்று பாஜக எம்.பி.யின் பேச்சின் மூலம் நரேந்திர மோடி மற்றும் அவரது சங்பரிவாரத்தின் மறைக்கப்பட்ட நோக்கங்களை பகிரங்கமாக அறிவிப்பதாகும். பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பை அழிப்பதே நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் இறுதி இலக்கு. .

சமூகத்தைப் பிளவுபடுத்தி, ஊடகங்களை அடிமைப்படுத்தி, சுதந்திர அமைப்புகளை முடக்கி, எதிர்க்கட்சிகளை ஒழிக்க சதி செய்து இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தை குறுகிய சர்வாதிகாரமாக மாற்ற நினைக்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் கனவுகளுடன் சேர்ந்து இந்த சதியை முறியடிப்போம். மேலும், அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள ஜனநாயக உரிமைகளுக்காக இறுதி மூச்சு வரை தொடர்ந்து போராடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.