Lok Sabha elections Election Commission of India Important Instruction

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மக்களவை தேர்தலின் போது குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும், குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை வைத்து பிரச்சாரம் மேற்கொள்வவோ, சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம் செய்தல், முழக்கம் எழுப்பவோ, பேரணிகளில்ஈடுபடுத்துவதையோ தவிர்க்க வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் குழுந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரச்சாரம் மற்றும் பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment