Skip to main content

எல்.ஐ.சி.யின் உள்ளார்ந்த மதிப்பு அதிகரிப்பு! 

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

LIC Intrinsic Value Increase!

 

எல்.ஐ.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு குறைந்துள்ள நிலையில், அதன் உள்ளார்ந்த மதிப்பு அதிகரித்துள்ளது. 

 

இந்தியாவில் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 3.5% பங்குகளை கடந்த மே மாதத்தில் விற்பனை செய்த மத்திய அரசு, அதன் மூலம் 21,000 கோடி ரூபாயைத் திரட்டியுள்ளது. கடந்த மே 17- ஆம் தேதி ரூபாய் 875- க்கு விற்பனையான எல்.ஐ.சி.யின் பங்குகள், ஜூலை மாதம் 15- ஆம் தேதி 708 ரூபாயாக, அதாவது 19% விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. 

 

எல்.ஐ.சி. பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு தற்போது 4,50,434 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால் எல்.ஐ.சி.யின் உள்ளார்ந்த மதிப்பு கடந்த 2021- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,39,686 கோடி ரூபாயாக இருந்து கடந்த 2022- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5,41,492 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 

 

ஒரு நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்புடன் எதிர்கால லாபத்தின் தற்போதைய மதிப்பைக் கூட்டுவதன் மூலம் அதன் உள்ளார்ந்த மதிப்பு கணக்கிடப்படுகிறது. எல்.ஐ.சி.யின் புதிய வணிகத்தின் மதிப்பு கடந்த 2020- 21ல் 4,167 கோடி ரூபாயாக இருந்து, 2021- 22ல் 7,619 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 

 

எல்.ஐ.சி. பங்குகளின் விலை குறைந்தாலும், அதன் உள்ளார்ந்த மதிப்பு அதிகரித்து வருவது, அதன் லாப விகிதம் அதிகரிப்பதை சுட்டிக்காட்டுகிறது.

 

சார்ந்த செய்திகள்