கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் கடந்த 17 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது.
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான நான்கு நாள் விவாதத்திற்கு பிறகு நேற்று மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானதால், முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து நாளை எடியூரப்பா நாளை ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த குழப்பங்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, "கூட்டணியை தொடர்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் என்னிடம் ஏதும் பேசவில்லை. அவர்கள் விரும்பினால் எங்களது கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும். இனி வரும் காலங்களில் மதசார்பற்ற ஜனதா தளத்தை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்து கவனம் செலுத்த உள்ளோம்" என கூறியுள்ளார்.