கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தியின் ஆங்கில பேச்சை தமிழில் தவறுதலாக மொழி பெயர்த்த விவகாரம் அப்போது தொலைக்காட்சிகளில் வரை விவாத பொருளாக மாறியது. அதே போல் கேரளா வந்த பிரியங்கா காந்தி மற்றும் மா.கம்யூனிஸ்ட் பிருந்தாகாரத் ஆகியோரின் ஆங்கில பேச்சின் மொழி பெயர்ப்பும் தவறுதலாக இருந்தது.
இந்த நிலையில் ராகுல்காந்தியின் எம்.பி தொகுதியான கேரளா வயநாட்டில் உள்ள மலைகிராமமான கருவாரகுந்து அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது தொகுதி நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்ட அறிவியல் ஆய்வு கூடத்தை ராகுல்காந்தி திறந்து வைத்தார். அப்போது அவரின் ஆங்கில பேச்சை மலையாளத்தில் மொழி பெயர்க்க ஆசிரியர் அனில்குமார் தயாராக இருந்த போதும் ராகுல்காந்தி அங்கு கூடியிருந்த மாணவ மாணவிகளை பார்த்து எனது பேச்சை மொழி பெயர்க்க உங்களில் யார் தயாராக இருந்தாலும் வாருங்கள் என கூறினார்.
அப்போது நிசப்தமாக இருந்த அந்த மாணவா்கள் கூட்டத்தில் இருந்து நான் வருகிறேன் என்று +2 படிக்கும் அறியியல் பிரிவு மாணவி ஷஃபா பெஃவின் பலத்த கரகோஷத்துடன் எழுந்து மேடைக்கு வந்த அவளை உற்சாகத்துடன் மேடை படிக்கட்டில் வந்து மாணவியின் தோளில் தட்டி வரவேற்றார் ராகுல்காந்தி.
அதைத் தொடர்ந்து பேசிய ராகுல்காந்தியின் ஆங்கில மொழியை மாணவி ஷஃபா பெஃவின் எந்த வித பதட்டமும் இல்லாமல் அந்த ஊா் சிலாங்கில் மக்களுக்கு புரியும் விதமாக சந்தேகமும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமலும் மலையாளத்தில் மொழி பெயர்த்தார். ராகுல் காந்தி இன்றைய காலகட்டத்தில் அறிவியலின் முன்னேற்றம் பற்றி பேசியதை அந்த மாணவி விவரித்து விளக்கமாக பேசியது, அங்கிருந்த ஆசிரியர்களையும் மெய்சிலிர்க்க வைத்ததாக ஆசிரியர்கள் கூறினார்கள்.
பின்னர் அந்த மாணவிக்கு ராகுல்காந்தி சாக்லெட் கொடுத்து வாழ்த்தினார். அதோடு மாணவியை ஆசிரியர்களும் சக மாணவா்களும் கட்டி தழுவி வாழ்த்தினார்கள். மாணவியின் மொழிபெயர்பை பெற்றோர்கள் தந்தை குன்னிமுகமது தாயார் ஷமிரா தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.