இந்தியாவில் கரோனாபாதிப்பு குறைந்துவந்த நிலையில், கேரளாவில் மட்டும் தினசரி கரோனாபாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் தினசரி கரோனாபாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வருகிறது.
நேற்று அம்மாநிலத்தில்32,803பேருக்கு கரோனாஉறுதியானது. இந்தநிலையில்கேரளாவில் இன்றும்32,097 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 188 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கரோனா உறுதியாகும் சதவீதம் தற்போது 18.41 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.