இந்தியாவிலே கேரளாவில்தான் தினசரி கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மைக்காலமாகப் பஞ்சாயத்து மற்றும் நகர வார்டுகள் மட்டத்தில் கேரள அரசு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் கேரள அரசு, கரோனாவால் பாதிக்கப்பட்ட அல்லது கரோனா பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அரசு ஊழியர்களுக்கு 7நாள் சிறப்புத் தற்காலிக விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவ ஊழியர்களுக்கும், உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்களுக்கும் இந்த சிறப்புத் தற்காலிக விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்பு வழங்கும் பிரமாண பாத்திரத்தின் அடிப்படையில், இந்த சிறப்புத் தற்காலிக விடுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த விடுப்பினை எடுப்பவர்கள் மீண்டும் பணியில் சேர கரோனா நெகட்டிவ் சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.