Skip to main content

இரத்தத்தை உறிஞ்ச நினைத்தவர்களுக்கு தற்காலிக வெற்றி; ராஜினாமா செய்த கேரள அமைச்சர்!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

kt jaleel

 

கேரள மாநிலத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் கே.டி.ஜலீல். இவர் முறைகேடாக அரசு பதவியை தனது உறவினருக்கு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதனையடுத்து, கே.டி.ஜலீல் மீதான புகாரை விசாரித்த லோக் ஆயுக்தா அமைப்பு, கே.டி.ஜலீல் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது என அறிவித்ததோடு, அவரை பதவி விலக அறிவுறுத்துமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனை வலியுறுத்தியது.

 

லோக் ஆயுக்தாவின் இந்த முடிவை எதிர்த்து கே.டி.ஜலீல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இருப்பினும் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தான் கேரள முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டதாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், தனது சமூகவலைதள பக்கத்தில் அவர், "எனது இரத்தத்தை உறிஞ்ச விரும்பியவர்களுக்கு, இது தற்காலிக வெற்றி. எனது ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் வழங்கியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். மூன்று மத்திய புலனாய்வு அமைப்புகள் சலித்தெடுத்து ஆய்வு செய்தும், தவறு செய்ததற்கான எந்த தடயத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்பதை பொதுவாழ்க்கையில் கிடைத்த சிறந்த அங்கீகாரமாக பார்க்கிறேன்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்