கேரளமாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளம் என்ற பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவன் தனது பக்கத்து வீட்டில் இருந்து டயர்ஒன்றைஎடுத்து வந்து தனது வீட்டின் அருகில் உள்ள வயலில் வைத்து தீயிட்டு எரித்துள்ளான். சிறுவனின் செயலைக் கண்டதாய் சிறுவனைக் கண்டித்ததுடன் தோசை கரண்டியால் சிறுவனின்கை மற்றும் கால்களில் சூடு வைத்துள்ளார். மேலும், சிறுவனின்கண்களில் மிளகாய் பொடியையும்தூவி உள்ளார்.
இதனால் வலி பொறுக்க முடியாத அச்சிறுவன் அலறியடித்துபெரும் கூச்சலிட்டு உள்ளான்.சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்ட அவ்வழியாகச் சென்ற பெண் ஒருவர் இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தந்துள்ளார்.
விரைந்து வந்து சிறுவனை மீட்டபோலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கனவே பலமுறை சிறுவனின் தாயார் அச்சிறுவனை கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனையடுத்துபோலீசார் சிறுவனின்தாயார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.