கேரளா மாநிலம் கொச்சி உதயம்பேரு காவல்நிலையத்தில் மனைவி வித்யா (43) காணவில்லை என்று கடந்த செப்டம்பர் 25- ஆம் தேதி அதே பகுதியில் வசிக்கும் பிரேம்குமார்(48) புகார் மனு கொடுக்க போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினார்கள். பிரேம்குமார் கொடுத்த ஓவ்வொரு தகவலின் அடிப்படையில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டும் எந்த துப்பும் துலக்கவில்லை. பிரேம்குமாரும் போலீசுக்கு சந்தேகம் இல்லாத படி நடந்து கொண்டார்.
இந்த நிலையில் போலீசார் முக்கியமான ஓருவரை பிடித்து விசாரிக்க இருப்பதாகவும், அவர் மீது தான் சந்தேகம் என்று பிரேம்குமாரின் காதுக்கு எட்டும்படி தகவலை கசிய விட்டனர். அதனால் பிரேம்குமார் தன்னை இந்த வழக்கில் போலீசார் விசாரிக்க கூடாது என்று கொச்சின் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து போலீசாருக்கு பிரேம்குமார் மீது சந்தேகம் வலுத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் பிரேம்குமாரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது மனைவியை பள்ளி காதலியுடன் சேர்ந்து வாழுவதற்காக கொலை செய்து நாடகமாடியதாக பிரேம்குமார் ஒப்பு கொண்டார். இதையடுத்து கொலை குறித்து கூறுகையில், பிரேம்குமார் ஹோட்டல் ஓன்றில் வேலை பார்க்கும் போது அங்கு வந்த வித்யாவிடம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருடைய குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமாக தான் சென்று கொண்டியிருந்தது.
இந்தநிலையில் தான் ஹைதராபாத்தில் கணவன் இரண்டு குழந்தைகளோடு வாழ்ந்து வந்த சுனிதா (48) இவா்களின் சந்தோஷமான வாழ்க்கைக்குள் நுழைகிறாள். பிரேம்குமாரும் சுனிதாவும் 1994- 95 யில் திருவனந்தபுரத்தில் 10- ஆம் வகுப்பு ஒன்றாக படித்தவர்கள். அப்போது அவர்களுக்குள் சக மாணவர்கள் என்ற பழக்கத்தை மீறி இருவரும் ஒருலையாக காதலித்து இருக்கிறார்கள். அதோடு பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் தான் அந்த ஆண்டில் படித்த மாணவர்களின் கெட்டு கெதர் (get together) நிகழ்ச்சி கடந்த மே மாதம் 25-ம் தேதி நடந்தது.
இதில் பிரேம்குமார் தனது மனைவி வித்யாவுடனும் சுனிதா தனது கணவா் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டார். அப்போது பிரேம்குமாரும், சுனிதாவும் நெருங்கிய பழகி பேசியதில் பழைய நினைவுகள் ஞாபகம் வரவே இருவரும் நெருக்கமாகி இருக்கிறார்கள். இதன் விளைவு சுனிதா கணவன் குழந்தைகளை விட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நா்ஸ் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார். பிரேம்குமாரும் சுனிதாவும் கணவன் மனைவி போல் வாழ தொடங்கினார்கள். இது வித்யாவுக்கு தெரிய வர அவள் கண்டித்ததால் வித்யாவை கொலை செய்து இருவரும் கணவன் மனைவியாக வாழ முடிவு செய்தனர்.
இதையடுத்து ஆயுர்வேத சிகிச்சையில் இருந்த வித்யாவுக்கு ஆயுா்வேத மருந்துடன் மது கலந்து கொடுத்து இருவரும் தமிழில் 96 மலையாளத்தில் த்ரிஷியம் பட பாணியில் வித்யாவை கொலை செய்து, அவளுடைய செல்போனை திருவனந்தபுரம் மும்பை செல்லும் நேத்ராவதி ரயிலில் போட்டு விட்டனா். வித்யாவின் உடலை இருவரும் காரில் ஏற்றி நெல்லை மாவட்டம் ஏா்வடி மலைப்பகுதியில் கொண்டு போட்டனர் என்று காவல்துறையினர் கூறினர். இந்த சம்பவத்தால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.